இராவணா அருவிக்கு செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பெய்து வரும் கனமழை காரணமாக பதுளை எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் அமைந்துள்ள இராவணா அருவியின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறு அறிவிப்பு இதன் காரணமாக தண்ணீர் பாய்ந்தோடும் இராவணா அருவிக்கு அருகில் செல்வது மற்றும் அதற்கு அருகில் நீராடுவதை தவிர்க்குமாறு பொலிஸார் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவித்துள்ளனர். இலங்கையின் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள இராவணா அருவி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. … Continue reading இராவணா அருவிக்கு செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!